அமெரிக்க அதிபர் பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

 

அமெரிக்க அதிபர் பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியவத்துவம் கொடுத்து வருகிறார். தேர்தலுக்கு முன்பே துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. அவர் பைடனுடன் சேர்ந்து பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க அதிபர் பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

இது மட்டுமில்லாமல் பைடனின் நிர்வாகக் குழுவில் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் பெண்கள். இக்குழுவில் நீரா தாண்டன் என்பவரும் இருந்தார். அவரது பெயர் வெள்ளை மாளிகை மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநர் பொறுப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் செனட் சபையில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அவரது நியமனத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்குப் பின் அவரது பெயர் வாபஸ் பெறப்பட்டது. தற்போது அவருக்கு அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க டிஜிட்டல் சேவையை மறுஆய்வு செய்வது, குறிப்பிட்ட சட்டத்தைத் தடுத்துநிறுத்தும் பொருட்டு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தொடுத்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் பரிசீலித்ததன் விளைவாக ஏற்படக்கூடிய விளைவுகளைக் கண்காணிப்பது ஆகிய இரு பணிகள் நீராவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 50 வயதான நீரா ஏற்கெனவே அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையில் சுகாதார சீர்திருத்தங்களுக்கான மூத்த ஆலோசகராக பணியாற்றினார். முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் உள்நாட்டுக் கொள்கைக்கான இணை இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.