கொரோனா வைரஸால் தடுமாற்றம்….. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லாபம் 86 சதவீதம் வீழ்ச்சி

கொரோனா வைரஸால் தடுமாற்றம்….. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லாபம் 86 சதவீதம் வீழ்ச்சி

வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.137 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.1,006 கோடி ஈட்டியிருந்ததது.

கொரோனா வைரஸால் தடுமாற்றம்….. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லாபம் 86 சதவீதம் வீழ்ச்சி

ஆக, கடந்த மார்ச் காலாண்டில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் 86 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கொரோனா வைரஸால் ஏற்பட்ட நிச்சயமற்றதன்மை காரணமாக அந்நிறுவனம் அதிகளவில் ஒதுக்கீடு செய்ததே நிகர லாபம் குறைந்தற்கு முக்கிய காரணம். அந்நிறுவனம் தனது கடன் புத்தகத்தில் 1 சதவீதத்தை அதாவது ரூ.700 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கொரோனா வைரஸால் தடுமாற்றம்….. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லாபம் 86 சதவீதம் வீழ்ச்சி

2020 மார்ச் காலாண்டில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.2,954 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த வருவாயாக ரூ.4,344 கோடி ஈட்டியிருந்தது.