“சானிடைசர் கிடைக்கா விட்டால் சோப் உபயோகியுங்கள்!” – திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

 

“சானிடைசர் கிடைக்கா விட்டால் சோப் உபயோகியுங்கள்!” – திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

சானிடைசர் கிடைக்கா விட்டால் சோப் உபயோகிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

திருச்சி: சானிடைசர் கிடைக்கா விட்டால் சோப் உபயோகிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகாட்ட தொடங்கியுள்ளது. இதுவரை 2 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். மேலும் 93 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், சுகாதார முகமூடிகளை அணிய வேண்டும், வெளியிடம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பல தரப்பாலும் அறிவுறுத்தப்படுகிறது.

ttn

இந்நிலையில், கைகளை சுத்தமாக கழுவ சானிட்டைசர்கள் கிடைக்கா விட்டால் அதற்கு பதிலாக சோப் கொண்டு கைகளைக் கழுவுமாறு பொது சுகாதாரத் துறை மற்றும் தடுப்பு மருந்து மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆகியவை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவத் தொடங்கியதிலிருந்து முன்னணி நிறுவன சானிடைசர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.