ஸ்பைஸ் ஜெட்டில் டிக்கெட் எடுத்தால் சீட் பெல்ட் இல்லாமலும் பறக்கலாம்!

 

ஸ்பைஸ் ஜெட்டில் டிக்கெட் எடுத்தால் சீட் பெல்ட் இல்லாமலும் பறக்கலாம்!

வழக்கமான அறிவிப்புகள், விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்கிற ‘ “மைமிங்” எல்லாம் முடிந்தன. “சீட் பெல்டுகளை அணிந்து கொள்ளுங்கள் ” என்ற அறிவிப்பு வந்தது. அப்போதுதான் சிக்கல் ஆரம்பித்திருக்கிறது!

சமீபத்தில் ஷீரடிக்கு தன் மனைவியுடன் போய்வந்த பத்திரிகையாளர் ரூபன் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ஸ்ரீ சாய்ராம் சுபயத்ரா என்கிற டிராவல் ஏஜென்சி, குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா,ஆன்மிக சுற்றுலா செல்ல பயண ஏற்பாடு செய்து தருகிறார்கள். அப்படி சென்னையில் இருந்து கடந்த  9-ம் தேதி 12.15 க்கு ஷீரடி போகும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் குறிப்பிட்ட  பத்திரிகையாளர் உட்பட ஒரு குழுவை அழைத்துச் சென்றிருக்கிறது அந்த ட்ராவல் ஏஜென்ஸி.

spicejet-ticket

அவர்களுக்கு 32 சி, 32 பி  சீட்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.சீட்டில் அமர்ந்தார்கள். வழக்கமான அறிவிப்புகள், விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்கிற ‘ “மைமிங்” எல்லாம் முடிந்தன. “சீட் பெல்டுகளை அணிந்து கொள்ளுங்கள் ” என்ற அறிவிப்பு வந்தது. அப்போதுதான் சிக்கல் ஆரம்பித்திருக்கிறது! 32 சி,32 பி  சீட்டில் உட்கார்ந்திருந்த ரூபன் மனைவிக்கு சீட் பெல்ட் நீளம் போதவில்லை.கடந்த டிசம்பரில் திருவனந்தபுரம் போய் வந்தபோது ( போகும்போது ஏர்- இந்தியா- வரும்போது இண்டிகோ) எல்லாம் அந்த விமான இருக்கையில் இருந்த சீட் பெல்ட்கள் போதுமானதாகவே இருந்திருக்கின்றன.

spicejet-09

விமானப் பணிப்பெண்ணை அழைத்துச் சொன்னதும்,அவர் ஒரு இணைப்பு பெல்ட்டைக் கொண்டு வந்து கொடுத்தார்.அது இருக்கையில் இருந்த பெல்ட்டுடன் இணைய மறுத்துவிட்டது. மீண்டும் இன்னொன்று கொண்டு வந்தார்கள்… அதுவும் அப்படியே.அப்புறம் என்ன செய்ய ரூபன் மனைவி சீட் பெல்ட்டே அணியாமல்தான் சீரடிக்கு பயணம் செய்திருக்கிறார்! 

விமான கட்டணம் குறைவு என்பதால் தண்ணீர் பாட்டில் கூடக் கிடையாது. கேட்டால் சிறிய பேப்பர் கப்பில் தண்ணீர் தருகிறார்கள்,அதிலாவது ஒருநியாயம் இருக்கிறது. சீட் பெல்டில் கூடவா நீளத்தைக் குறைத்து சிக்கனம் காட்டுவது?!