வீட்டுக்கு ஒரு மரம் பழசு. வீட்டுக்குள் ஒரு மரம் புதுசு!

 

வீட்டுக்கு ஒரு மரம் பழசு. வீட்டுக்குள் ஒரு மரம் புதுசு!

வீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவத்தை மரத்துக்கும் அளிக்க முடிவுசெய்த கேஷ்வர்தினி குடும்பத்தினர், மரத்தை சுற்றியே வீட்டை கட்டி முடித்தனர். வீட்டுக்கு ஒரு மரம் என்பதை கேஷ்வர்தினி குடும்பத்தினர் வீட்டுக்குள் ஒரு மரமாக மாற்றி வித்தியாசப்படுத்தி உள்ளனர்

ஒரு மரம் ஒரு கோடி தீக்குச்சிகளை உருவாக்கும், ஒரு தீக்குச்சி ஒரு கோடி மரங்களை அழிக்கும் என்ற வனத்துறையின் பிரபலமான சுவரொட்டியை ஞாபகத்தில் இருக்கிறதா? ஒரு செடியை நட்டு, வளர்த்து, அதனை முழுதும வளரந்த‌ மரமாக பார்ப்பதற்குள் ஒரு தலைமுறையே முடிந்துவிடும். ஆனால், அம்மரம் தலைதலைமுறையாக அக்குடும்பத்திற்கு காய்க்கும் காலங்களில் கனியாகவும், கோடை காலங்களில் நிழலாகவும் தன் நன்றியை காட்டி வருகிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், அவர்களுக்கு சொந்தமான இடத்தில் நீண்டு வளர்ந்துள்ள மரத்தை வெட்ட மனமில்லாது, அந்த மரத்தை சிறு சேதாரமும் இல்லாமல் தங்களின் பாரம்பரியமான 4 மாடி கட்டிடத்தை புணரமைத்துள்ளது பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

Tree House

மத்தியப்பிரதேசம், ஜபல்புர் பகுதியை சேர்ந்த கேஷ்வர்னி குடும்பத்திற்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் அங்கே உள்ளது. வீடு பழைய வீடாக இருந்தாலும், ஸ்ட்ராங்காக இருந்ததால், வீட்டை இடிக்காமல், புணரமைப்பு மட்டும் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தவர்களுக்கு ஒரு சின்ன இடைஞ்சல். கட்டிடடத்தைச் சுற்றி 150 ஆண்டுகள் பழமையான அத்திமரம் வீட்டிற்குள் நுழைந்தும் நெளிந்தும் கம்பீரமாக வளர்ந்து நின்றது. வீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவத்தை மரத்துக்கும் அளிக்க முடிவுசெய்த கேஷ்வர்தினி குடும்பத்தினர், மரத்தை சுற்றியே வீட்டை கட்டி முடித்தனர்.

Tree House

வீட்டுக்கு ஒரு மரம் என்பதை கேஷ்வர்தினி குடும்பத்தினர் வீட்டுக்குள் ஒரு மரமாக மாற்றி வித்தியாசப்படுத்தி உள்ளனர். கூடவே, அத்தி மரம் புனிதமானது எனவும் அதில் கடவுள் குடிகொண்டிருப்பதாகவும் தெரிவித்த கேஷ்வர்னி குடும்பத்தினர் அம்மரத்தை வணங்கி வருகின்றனர்.