விரக்தியில் 120 டன் தக்காளியை கால்நடைகளுக்கு உணவாக்கிய விவசாயி

 

விரக்தியில் 120 டன் தக்காளியை கால்நடைகளுக்கு உணவாக்கிய விவசாயி

கர்நாடகாவில் தக்காளி விலை மிகவும் குறைந்ததால் 120 டன் தக்காளியை விவசாயி ஒருவர் கால்வாயில் கொட்டிய சம்பவம் நடந்துள்ளது.

பெலகாவி: கர்நாடகாவில் தக்காளி விலை மிகவும் குறைந்ததால் 120 டன் தக்காளியை விவசாயி ஒருவர் கால்வாயில் கொட்டிய சம்பவம் நடந்துள்ளது.

நாடு முழுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் கோலிக்கு நான்கு ஏக்கர் நிலத்தில் நல்ல விளைச்சல் மூலம் தக்காளிகள் அதிகளவில் விளைந்தன. ஆனால் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தக்காளிகளை சந்தைப்படுத்த முடியாததாலும் அமித் கோலி பெரும் விரக்தி அடைந்தார்.

Tomato

இதனால் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் வாங்கி ஊற்றக்கூட கையில் பணம் இல்லாமல் அவர் அவதியுற்றார். இதையடுத்து சுமார் 120 டன் தக்காளிகளை அவர் கால்வாயில் கொட்டியும், ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுத்து அழித்துள்ளார். அவர் கால்வாயில் கொட்டிய தக்காளிகளை அங்கிருந்த கால்நடைகள் தின்றன. ஊரடங்கிற்கு முன் கிலோ ரூ.20 வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது கிலோ இரண்டு ரூபாய்க்கு கூட விற்கவில்லை என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.