மாடுகளை தீயின் மீது நடக்க வைக்கும் வினோத விழா கர்நாடகத்தில் கோலாகலம்!!-வீடியோ

 

மாடுகளை தீயின் மீது நடக்க வைக்கும் வினோத விழா கர்நாடகத்தில் கோலாகலம்!!-வீடியோ

கர்நாடக மாநிலத்தில் மகர சங்கராந்தி விழாவையொட்டி மாடுகளை தீயில் நடக்க வைக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மகர சங்கராந்தி விழாவையொட்டி மாடுகளை தீயில் நடக்க வைக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் “போகி” பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல்நாள் தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்த நல்ல நாளில் சூரிய பகவானுக்கு, விவசாயிகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்திக் கொண்டாடுகின்றனர். இரண்டாவது நாளில் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் கடைசி நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தை தவிர நாட்டின் பிற பகுதிகளில், பொங்கல் பண்டிகையான சூரிய வழிபாடு மகர சங்கராந்தி என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவதை போன்று கர்நாடக மாநிலத்தில் மகர சங்கராந்தியன்று மாடுகளை நேரிபின் மீது நடக்க வைக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக தங்களது காளைகளுக்கு விதவிதமான அலங்காரம் செய்து கொண்டு வந்த விவசாயிகள், சாலையில் வைக்கோலைப் பரப்பி அதில் தீயை மூட்டி அதன் மேல் தங்களது காளைகளை நடக்க வைத்து அழைத்துச் சென்றனர். இவ்வாறு செய்வதால் காளைகளுக்கு தீங்கு நேராது என்பது நம்பிக்கையாம்…