பொக்கை வாயால் ஆங்கிலத்தில் அசத்தும் பாட்டி -தட்டி தூக்கும் நெட்டிசன்கள்-வைரலாகும் வீடியோ
அந்த வீடியோவில் ஒரு வயதான பெண்மணி ஒரு வெள்ளை சட்டை அணிந்து, சிவப்பு நிற சேலையினை போர்த்திக்கொண்டு ,அழகான ஆங்கிலத்தில் மகாத்மா காந்தியை பற்றியும் அவரின் அகிம்சை மீதான கொண்ட காதல் பற்றியும் விரிவான விளக்கத்தை அளிக்கிறார் .
புதுடெல்லியில் ஒரு வயதான கிராமத்து பாட்டி சரளமாக ஆங்கிலத்தில் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி,நெட்டிசன்கள் பாராட்டுகளை குவிக்கின்றனர் .
அந்த வீடியோவில் ஒரு வயதான பெண்மணி ஒரு வெள்ளை சட்டை அணிந்து, சிவப்பு நிற சேலையினை போர்த்திக்கொண்டு ,அழகான ஆங்கிலத்தில் மகாத்மா காந்தியை பற்றியும் அவரின் அகிம்சை மீதான கொண்ட காதல் பற்றியும் விரிவான விளக்கத்தை அளிக்கிறார் . இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்கள் கருத்துக்களை குவிக்கின்றனர் .
How many marks out of 10 for the old lady for this spoken English Test? pic.twitter.com/QmPSEd4o0L
— Arun Bothra (@arunbothra) March 1, 2020
இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரான் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.”இந்த ஆங்கிலம் பேசும் வயதான பெண்மணிக்கு 10 க்கு எத்தனை மதிப்பெண்கள் போடலாம் ?”என்றார்.அதற்கு பலர் 10க்கு 10 மார்க் அள்ளி வழங்கினார்கள்.
இந்த பாட்டி பற்றி ஒரு பயனர் எழுதினார், “நாங்கள் யாரும் அவரை மதிப்பிடுவதற்கு தகுதியானவர்கள் அல்ல.”என்றார்.