பெண்களுக்கு வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்துக்கொள்ளும் மாப்பிள்ளைகள்! எங்கு தெரியுமா?

பெண்களுக்கு வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்துக்கொள்ளும் மாப்பிள்ளைகள்! எங்கு தெரியுமா?

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு காரணமாக மற்ற மாநிலப் பெண்களுக்கு பணம் கொடுத்து திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஹரியானா மாநில மாப்பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு காரணமாக மற்ற மாநிலப் பெண்களுக்கு பணம் கொடுத்து திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஹரியானா மாநில மாப்பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

ஹரியானாவில் உள்ள ஆண்கள் திருமணம் செய்து கொள்ள மற்ற மாநிலங்களை நாடும் நிலை உருவாகி இருக்கின்றது. அதற்காக, மணப்பெண்களின் கல்வி, சமூக அந்தஸ்து, தோற்றம் உள்ளிட்டவற்றை கணக்கில்கொண்டு 35 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பெண் வீட்டாரிடம் கொடுத்து மணமுடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Marriage

இதற்காக, பீகார், அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் அண்டை நாடான நேபாளிலிருந்தும் சாதி, மதங்களைத் தாண்டி மணப்பெண்களை ஹரியானா மாநில ஆண்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இதுபோன்று பெண்களைத் தேர்ந்தெடுக்க அவர்கள் டெல்லி, அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் முகவர்களை நாடுவதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக, பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்கும் நிலைமாறி ஹரியானாவில் ஆண்கள் பணம் கொடுத்து பெண்களை திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டிருப்பது பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.