புருசன் வேண்டாம், ஆனால் அவர்மூலமா குழந்தை வேண்டும்! கோர்ட் விசித்திரம்

 

புருசன் வேண்டாம், ஆனால் அவர்மூலமா குழந்தை வேண்டும்! கோர்ட் விசித்திரம்

என்னாது திரும்பவும் முதல்ல இருந்தா, அதெல்லாம் எந்த வாய்ப்பும் கிடையாது, வெட்டிவிட்ட உறவை திரும்ப ஒட்டிக்க வைக்கிற டெக்னிக் இது, நான் இந்த ஆட்டத்துக்கு வரல”ன்னு விலகி ஓடிவிட்டார்.

இந்த நீதிமன்றங்கள் இன்னும் எத்தனை எத்தனை விதவிதமான வழக்குகளை கையாளப் போகின்றனவோ தெரியவில்லை. மும்பை ஜோடிக்கு திருமணம் ஆகி, பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், மனைவி கொடுமைப்படுத்துவதாகக்கூறி கணவர் விவாகரத்து கோரியுள்ளார். வழக்கு நிலுவையில் இருக்கும் இந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை தாயுடன் வசித்து வரும் நிலையில், மனைவி திடீரென கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். “எனக்கு நீங்க விவாகரத்து வாங்கி தருவீங்களோ மாட்டீங்களோ, எனக்கு அவர் மூலமா இன்னொரு குழந்தை வேண்டும். இயற்கையான முறையானாலும் சரி, செயற்கை கருத்தரிப்பாக இருந்தாலும் சரி, சீக்கிரம் யோசிச்சு ஒரு முடிவைச் சொல்லுங்க யுவரானர்” என வழக்குப் போட்டுவிட்டார்.

Peculiar case

நீதிபதிக்கு தர்ம சங்கடம். இருந்தாலும் வேறு வழியில்லை. கணவரை அழைத்து “இந்தாப்பா, இந்த மாதிரி உன் சம்சாரம் இப்புடி ஒரு கோரிக்கையோட வந்து நிக்கிது, உடலுறவு மூலமா கருவா இல்லை செயற்கை முறைக்கு விந்து தானம் பண்றியா” என கேட்க, கணவருக்கு வந்ததே கோவம். “என்னாது திரும்பவும் முதல்ல இருந்தா, அதெல்லாம் எந்த வாய்ப்பும் கிடையாது, வெட்டிவிட்ட உறவை திரும்ப ஒட்டிக்க வைக்கிற டெக்னிக் இது, நான் இந்த ஆட்டத்துக்கு வரல”ன்னு விலகி ஓடிவிட்டார். இது சம்பந்தமான முறையான சட்ட நுணுக்கங்கள் இந்தியாவில் இல்லை. எனவே, பல்வேறு வெளிநாட்டு வழக்குகளை படித்துப்பார்த்துவிட்டு, “ஒரு பெண் தன் வாரிசை பெருக்கிக்கொள்ள நினைப்பது அவரது அடிப்படை உரிமை, எனவே கணவராகிய நீங்கள் அதற்கு உதவவேண்டியது உங்கள் கடமை, ஒழுங்கு மரியாதையா செயற்கை கருத்தரிப்புக்கு தேவையான நடவடிக்கையை உடனடியா துவங்குங்கள்” என உத்தரவிட்டுவிட்டார்.