புதுப்புது மாடல்களை வாங்கி குவிக்கும் இளைஞர்கள்! இந்த வருஷம் 16.5 கோடி செல்போன் சேல்ஸ் ஆகுமாம்….

 

புதுப்புது மாடல்களை வாங்கி குவிக்கும் இளைஞர்கள்! இந்த வருஷம் 16.5 கோடி செல்போன் சேல்ஸ் ஆகுமாம்….

இந்த 2020ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 16.5 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என ஆய்வு நிறுவனமான டெக்ஆர்க் கணித்துள்ளது.

செல்போன் வரவால் தகவல் தொடர்பு எளிதானது. அதேசமயம் நமது வாழ்க்கை முறையும் மாறி விட்டது. நாம் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் நம்மை அறியாமலே செல்போனுக்கு அடிமையாக மாறி விட்டோம். 5 வயது குழந்தைகள் முதல் 15 வயது சிறுவர்கள் வரை செல்போனில் கேம் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். கல்லூரி மாணவர்களோ செல்போனில் தங்களது நண்பர்களுடன் சாட்டிங் செய்கிறார்கள். இப்படி நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் செல்போனை தவிர்க்க முடியாமல் உள்ளோம்.

செல்போன் பயன்பாடு

நம் நாட்டில் நாளுக்கு நாள் செல்போன் விற்பனை அதிகரித்துதான் வருகிறது. இதற்கு நம்நாட்டின் மக்கள் தொகையும் ஒரு காரணம். இதனால் பல வெளிநாட்டு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைத்து இங்கு வந்து கடை போடுகின்றன. குறிப்பாக சீன நிறுவனங்கள் இந்திய செல்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

செல்போன் பார்க்கும் குழந்தை

2019 ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 14.5 கோடி செல்போன்கள் விற்பனையாகி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதனை காட்டிலும் செல்போன் விற்பனை 14 சதவீதம் அதிகரிக்குமாம். அதாவது இந்த மாதம் வரும் டிசம்பர் இறுதிக்குள் நம் நாட்டில் 16.5 கோடி செல்போன்கள் விற்பனையாகுமாம். நம்மவர்களில் பல பேர் அடிக்கடி தங்களது கையில் உள்ள செல்போனை மாற்றி வருவதும் விற்பனை அதிகரிப்பு காரணமாக இருக்கும் என ஆய்வு நிறுவனமான டெக்ஆர்க் தெரிவித்துள்ளது.