புதுச்சேரியில் கொரோனா உயிரிழப்புகளை தணிக்கை செய்ய உத்தரவு!

 

புதுச்சேரியில் கொரோனா உயிரிழப்புகளை தணிக்கை செய்ய உத்தரவு!

கொரோனா உயிரிழப்புகளை தணிக்கை செய்யுமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர புதுச்சேரி அரசு, அதிரடி நடவடிக்கைகளை கையாண்டது. அதாவது கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் முழுமுடக்கமும், வாரத்திற்கு ஒரு நாள் புதுச்சேரி முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கொரோனா பரிசோதனை அதிகப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் அங்கு பாதிப்பு குறைந்ததாக இல்லை.

புதுச்சேரியில் கொரோனா உயிரிழப்புகளை தணிக்கை செய்ய உத்தரவு!

புதுச்சேரியில் தற்போதைய நிலவரத்தின் படி, இன்று மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 22,456 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகளை தணிக்கை செய்ய மருத்துவ அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரத்தை முழுவதுமாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.