நிலவின் வட்டப்பாதையைச் சுற்றத்தொடங்கியது சந்திரயான் 2  

 

நிலவின் வட்டப்பாதையைச்  சுற்றத்தொடங்கியது சந்திரயான் 2  

நிலவின் வட்டப்பாதையைச் சந்திரயான்2 சுற்றத்தொடங்கியதாக  இஸ்ரோ அறிவித்துள்ளது. 

நிலவின் வட்டப்பாதையைச்  சுற்றத்தொடங்கியது சந்திரயான் 2  

நிலவின் வட்டப்பாதையைச் சந்திரயான்2 சுற்றத்தொடங்கியதாக  இஸ்ரோ அறிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யச் சந்திரயான் 2 செயற்கைக்கோள்  கடந்த ஜூலை 22ம் தேதி ஏவப்பட்டது .

முதலில் புவி வட்டப்பாதையில் வட்டமடித்தது. அதன்பின் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, புவி வட்டப்பாதையிலிருந்து விலகி , நிலவின் வட்டப்பாதையை நோக்கிப் பயணித்தது.

 

இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப் பாதைக்குச் சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதையடுத்து விண்கலத்தின் திசையானது  ஆகஸ்ட் 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில், நான்கு முறை மாற்றியமைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து  நிலவின் கடைசி சுற்று வட்டப்பாதையைச் சந்திரயான் 2 விண்கலம் அடையும்.  இதையடுத்து செப்டம்பர் 2-ம் தேதி, விக்ரம் லேண்டர் எனப்படும் தரையிறங்கும் சாதனம், சந்திரயான்-2 வில் இருந்து பிரிந்து, நிலவின் மேற்பரப்பில் சுற்றிவரும். பின்னர் அதன் வேகம் குறைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அது நிலவில் மெதுவாகத் தரையிறங்கும்’ என்று தெரிவித்துள்ளது.