நாசாவின் முயற்சி தோல்வி: விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை!

 

நாசாவின் முயற்சி தோல்வி:   விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை!

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா: இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. 

சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் மட்டுமில்லாது ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியது. இருப்பினும் தற்போது விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,  நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பதை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் இஸ்ரோ கூறியது. 

moon

இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்குத் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர். தற்போர்த்து இஸ்ரோவுடன் அமெரிக்காவின் நாசாவும் கைகோர்த்துள்ளது. அதன்படி கடந்த 2009 ஆண்டு நாசா அனுப்பியுள்ள புலனாய்வு ஆர்பிட்டர் தற்போதுவரை நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வரும் நிலையில் அது விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பவும், லேண்டருடன் சமிக்ஞை ஏற்படுத்தவும் முயற்சி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தது. 

lander

இந்நிலையில் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. லேண்டருடன் சமிக்ஞை ஏற்படுத்தவும் இயலவில்லை என்று கூறியுள்ளது.