தேர்தல் களம் 2019 : ஐயப்பனை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்!

 

தேர்தல் களம் 2019 : ஐயப்பனை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்!

சபரிமலை விவகாரத்தைத் தேர்தல் பிரசாரத்தில் பேசியதற்காக, நடிகர் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

திருச்சூர்: சபரிமலை விவகாரத்தைத் தேர்தல் பிரசாரத்தில் பேசியதற்காக, நடிகர் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

சபரிமலை விவகாரம் 

sabarimalai

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.அதே சமயம் பிந்து, கனகதுர்கா என்ற 50 வயதுக்கும் குறைவான இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்போடு சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ததால் கூடுதல் எதிர்ப்பு கிளம்பியது.

மத பிரசாரம் கூடாது 

ec

இதையடுத்து மக்களவை தேர்தல் நெருங்கும்  நிலையில் சபரிமலை விவகாரத்தைச் சிலர் ஆயுதமாகப் பயன்படுத்த நேரிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா, “உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்துத் தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது அல்லது மதத்தின் பெயரால் ஓட்டு சேகரிப்பது போன்றவை தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். குறிப்பாகச் சபரிமலை கோவிலின் பெயரால் மத பிரசாரம் மேற்கொள்வது தெளிவான விதிமீறல் ஆகும். எனவே இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிரடியாக அறிவித்தார்.

நடிகர் சுரேஷ் கோபி மீது புகார் 

suresh gopi

இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக சார்பாக நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். அதனால் அப்பகுதியில் தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வரும் அவர், தொடர்ந்து சபரிமலை விவகாரம் குறித்தும், ஐயப்பன்  குறித்தும் பேசிவருவதாகப்  பிறகட்சிகள் புகார் செய்தன. இதையடுத்து திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அனுபமா இது குறித்து 48 மணி நேரத்தில் விளக்கமளிக்குமாறு சுரேஷ் கோபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முன்னதாக திருப்பூர் வளையங்காடு பகுதிகளிலுள்ள இந்துக்களின் வீடுகளில் இந்து மக்கள் கட்சியினர்   இந்து தெய்வங்களை, கலாச்சாரத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள் உடன் கூட்டணி வைத்தவர்கள் எங்களிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம்’ எனும் வாசகம் அடங்கிய நோட்டீஸை  ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: என்னை ‘தெர்மாகோல் விஞ்ஞானி’யாக மாற்றியது இவர் தான்? உண்மையை உடைத்த செல்லூர் ராஜு