தேர்தலில் ஒருமுறைக்கூட போட்டியிடாத உத்தவ் தாக்கரே இன்று மகாராஷ்டிரா முதல்வர்! 

 

தேர்தலில் ஒருமுறைக்கூட போட்டியிடாத உத்தவ் தாக்கரே இன்று மகாராஷ்டிரா முதல்வர்! 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பதவியேற்ற மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பதவியேற்ற மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், நேற்று மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கி ரஸ் எம்எல்ஏக்கள் என மொத்தம் 158 பேர் கலந்து கொண்டனர். மேலும் 4 எம்எல்ஏக்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது. 

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்தார். இதற்கு இணாமாக அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ராத்திரியோடு ராத்திரியாக அமைக்கப்பட்ட இந்த அரசுக்கு எதிராக உடனே நம்பிக்கை வாகெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. தோல்வி பயத்தால் அஜித் பவாரும், பட்னாவிஸும் தங்களது பதவியை ராஜினாமா செய்து ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் பால்தாக்கரே மகனாகிய உத்தவ் தாக்கரே இதுவரை தேர்தலிலையே சந்தித்தது இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலை ஒருமுறைக்கூட சந்திக்காத உத்தவ் இன்று மாநிலத்தின் முதல்வர் என்பது சற்று ஆச்சர்யமான விஷயம்தான். மேலும் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்கவுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் உத்தவ் தாக்ரேவின் மகனான ஆதித்யா தாக்கரே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஓர்லி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.