திங்கட்கிழமை முதல் டோல்களில் இனி டிராஃபிக் ஜாம் இருக்காது… அதிகாரிகள் நம்பிக்கை!

 

திங்கட்கிழமை முதல் டோல்களில் இனி டிராஃபிக் ஜாம் இருக்காது… அதிகாரிகள் நம்பிக்கை!

ஃபாஸ்டேக் கட்டாயமாவதால் வரும் திங்கட்கிழமை முதல் டோல்களில் டிராஃபிக் ஜாம் என்ற பிரச்னையே இருக்காது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஃபாஸ்டேக் வாங்குவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ம் தேதியுடன் (நாளை) முடிகிறது. வருகிற 16ம் தேதி முதல் டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் கட்டாயமாவதால் வரும் திங்கட்கிழமை முதல் டோல்களில் டிராஃபிக் ஜாம் என்ற பிரச்னையே இருக்காது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

fastag

ஃபாஸ்டேக் வாங்குவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ம் தேதியுடன் (நாளை) முடிகிறது. வருகிற 16ம் தேதி முதல் டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் கணக்கு தொடங்கி, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அந்த வாகனங்கள் டோல் பிளாசாக்களில் நுழைந்த உடனேயே அவர்கள் கணக்கில் இருந்து டோல் பணம் எடுக்கப்பட்டுவிடும். இதனால், அவர்கள் டோல் பிளாசாவில் நிற்க வேண்டிய அவசியமில்லை. விரைவாக பயணம் செய்ய முடியும்.
அப்படி ஃபாஸ்டேக் வாங்காதவர்களுக்கு இரண்டு மடங்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் அக்கவுண்ட் தொடங்கி, ஸ்டிக்கரை தங்கள் வாகனங்களில் ஒட்டி வருகின்றனர். இது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது, “டோல் பிளாசாவில் போல் வாங்க, சரியான சில்லரை கொடுக்க என்று எந்த பிரச்னையும் இல்லை. கால விரையமும் இல்லை. வேகமாக டோல் பிளாசாவை கடந்து சென்றுகொண்டே இருக்கலாம். மேலும், எந்த எந்த டோலில் எவ்வளவு எடுக்கப்பட்டது என்ற விவரம் நம்முடைய கணக்கில் காட்டிவிடுகிறார்கள். இதனால், டோல் ரசீதை பத்திரமாக வைக்க வேண்டும், தொலைந்துவிட்டது என்ற பிரச்னையே இல்லை” என்றார்.

toll gate

நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வார இறுதி மற்றும் திங்கட்கிழமைகளில் டோல்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை பெருமளவில் குறையும் என்று நம்புகிறோம்” என்றார்.
டோல் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற பல கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் குறைந்தபட்சம் டோல் பிளாசாக்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இது கொஞ்சக் காலத்துக்கு டோல் பற்றிய வெறுப்பு ஓட்டுநர்கள் மத்தியில் எழாமல் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.