தலையில் சிவப்பு விளக்குடன் திரியும் உ.பி மாடுகள்! காரணம் தெரியுமா? 

 

தலையில் சிவப்பு விளக்குடன் திரியும் உ.பி மாடுகள்! காரணம் தெரியுமா? 

உத்தரபிரதேச மாநிலம் கமீர்பூர் மற்றும் நொய்டா சுற்றியுள்ள மாவட்டங்களில் சாலைகளில் நிற்கும் மாடுகள் வாகன விபத்தினாலும், ரயில் விபத்தினாலும் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பதுண்டு. இதுபோன்று தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால், கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்களுக்கு  5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. இருப்பினும் அங்கு சாலைகளில் மாடுகள் உலாவந்த வண்ணம் உள்ளன. 

பசுக்கள்

இதனால் சாலையில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்தைத் தவிர்க்க பசுவின் தலையில் சிவப்பு விளக்குகளை பொருத்தும் பணியில் அம்மாநில காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விளக்குகள் இரவு நேரங்களில் எரியக்கூடிய வகையில் ஏற்பாடு செய்திருப்பதால் பசுக்கள் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 

கடந்த ஆறு மாதங்களில் சாலைகளில் திரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடதக்கது.