தனலெட்சுமி வங்கிக்கு லட்சுமி கடாட்சம் கிடைச்சுட்டு! லாபம் 2 மடங்கு உயர்வு

 

தனலெட்சுமி வங்கிக்கு லட்சுமி கடாட்சம் கிடைச்சுட்டு! லாபம் 2 மடங்கு உயர்வு

தனலெட்சுமி பேங்க் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.22 கோடி ஈட்டியுள்ளது.

பொதுவாக பொதுத்துறை வங்கிகளை காட்டிலும் தனியார் வங்கிகள் நல்ல லாபம் பார்க்கும் என்ற கருத்து உண்டு. அது உண்மைதான் என்பது போல் தனியார் வங்கியான தனலட்சுமி பேங்கின் நிதிநிலை முடிவுகள் அமைந்துள்ளது. தனலட்சுமி வங்கி இன்று தனது செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

தனலட்சுமி பேங்க்

கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தனலட்சுமி பேங்க் நிகர லாபமாக ரூ.22.07 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 2 மடங்கு அதிகமாகும். 2018 செப்டம்பர் காலாண்டில் தனலட்சுமி பேங்க் நிகர லாபமாக ரூ.12.15 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

வருவாய்

2019 செப்டம்பர் காலாண்டில் தனலட்சுமி பேங்கின் மொத்த வருவாய் ரூ.276.85 கோடியாக உயர்ந்தது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி தனலட்சுமி வங்கியின் மொத்த வாரா கடன் 7.06 சதவீதமாக குறைந்துள்ளது. 2018 செப்டம்பர் இறுதியில் அந்த வங்கியின் மொத்த வாராக் கடன் 7.81 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இதே காலத்தில் தனலெட்சுமி பேங்கின் மொத்த வாராக் கடன் 2.92 சதவீதத்திலிருந்து 1.65 சதவீதமாக குறைந்துள்ளது.