டெல்லியில் போலீசுடன் இணைந்து தாக்குதல் நடத்தியது ஏ.பி.வி.பி குண்டர்களா?

டெல்லியில் போலீசுடன் இணைந்து தாக்குதல் நடத்தியது ஏ.பி.வி.பி குண்டர்களா?

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலீசாருடன் இணைந்து ஏ.பி.வி.பி குண்டர்களும் மாணவர்களைத் தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலீசாருடன் இணைந்து ஏ.பி.வி.பி குண்டர்களும் மாணவர்களைத் தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

fb

டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து போலீசார் தாக்குதல் நடத்தினர். அப்போது, போலீசாருடன் தாக்குதல் நடத்திய பலர் சீருடையில் இல்லை. ஜீன்ஸ் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ, பைக் ஹெல்மெட் என்று பார்க்கவே வித்தியாசமாக இருந்தனர். பாதுகாப்பு ஜாக்கெட்டை, திருப்பி அணிந்து இருந்தனர். பாதுகாப்பு ஜாக்கெட்டைக்கூட சரியாக அணியத் தெரியாதவர் உண்மையான காவலர்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  இவர்களில் ஒருவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

delhi

அந்த நபரின் பெயர் பாரத் ஷர்மா என்பதும், அவர் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் என்றும் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் என்றும், டெல்லி பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து வருகிறார் என்றும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. மேலும் டெல்லிப் பல்கலைக் கழக வளாகத்திலேயே சும்மா நின்றுகொண்டிருந்த மாணவரை பாரத் ஷர்மா எட்டி உதைக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நபரின் ஃபேஸ்புக் பக்கம் அகற்றப்பட்டுள்ளது. இதனால், சமூக ஊடகங்களில் பரவிய தகவல் உண்மைதானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு எல்லாம் இன்னும் டெல்லி போலீஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.