ஜெய்ஷ் ஏ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் காஷ்மீரில் கைது

 

ஜெய்ஷ் ஏ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் காஷ்மீரில் கைது

காஷ்மீரில் ஜெய்ஷ் ஏ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

காஷ்மீரில் ஜெய்ஷ் ஏ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புல்வாமா தாக்குதல் 

காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி அடில் தர் என்ற பயங்கரவாதி 350 கிலோ வெடிபொருள்கள் நிரம்பிய காரை, துணை ராணுவப் படையினர் சென்ற பேருந்துகள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினான்.  இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

pulwama

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் இத்தாக்குதல் ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதட்ட நிலை நீடிக்கிறது. 

பயங்கரவாதிகள் கைது 

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் ஏ முகம்மது இயக்கத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீநகர் – பரமுல்லா சாலையில், காரில் சென்று கொண்டிருந்த போது அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

pulwama

கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பயங்கரவாதிகள் 3 பேரிடம் ஜம்மு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க :

புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா உதவியா ? – இந்தியப் புலனாய்வுத் துறை விசாரணை

புல்வாமா தாக்குதல்; மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை