சுவாமி ஐயப்பன் தரிசனம்… பம்பை வரையில் வாகனங்கள் செல்லலாம்… ஆன்லைனிலேயே தரிசனம் புக் செய்யலாம்!

 

சுவாமி ஐயப்பன் தரிசனம்… பம்பை வரையில் வாகனங்கள் செல்லலாம்… ஆன்லைனிலேயே தரிசனம் புக் செய்யலாம்!

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு, சபரிமலை ஐயப்பனின் சன்னிதானம் முழுக்கவே தண்ணீரில் நிறைந்தது. பம்பையில் கரைபுரண்டோடிய தண்ணீரில், பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க  மலையேறு செல்வதற்கான பாதைகளும் சிதிலமடைந்தன. அதன் பிறகு திருவிதாங்கூர் தேவசம் போர்டு பக்தர்களின் வசதிக்காக நிறைய விஷயங்களை செய்ய துவங்கியுள்ளனர்.

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு, சபரிமலை ஐயப்பனின் சன்னிதானம் முழுக்கவே தண்ணீரில் நிறைந்தது. பம்பையில் கரைபுரண்டோடிய தண்ணீரில், பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க  மலையேறு செல்வதற்கான பாதைகளும் சிதிலமடைந்தன. அதன் பிறகு திருவிதாங்கூர் தேவசம் போர்டு பக்தர்களின் வசதிக்காக நிறைய விஷயங்களை செய்ய துவங்கியுள்ளனர். கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்கி மார்கழி, தை மாதங்கள் வரையில் சபரிமலையில் ஐயப்பனின் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். உலகம் முழுவதும் இருந்தும் பல லட்சக்கணக்கான பகதர்கள் இந்த குறிப்பிட்ட மாதங்களில், ஸ்வாமி ஐயப்பனின் தரிசனத்திற்காக வருவார்கள். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பலரும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்துவிடுவார்கள். 

sabarimalai

ஆன்லைனில் இதற்கென தனி வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. பயணம், ஸ்வாமி தரிசனம் மற்றும் தங்கும் அறை என்று மூன்று கட்டங்களாக ஆன்லைனில் புக் செய்ய வேண்டும். இந்த முறையில் பக்தர்கள் சிரமத்தை சந்தித்து வந்தததால், தற்போது இந்த முறையை மாற்றி இன்னும் எளிதாக பக்தர்களின் வசதிக்காக செய்ய உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் அறிவித்தார். இனி ஆன்லைனில், ஸ்வாமி ஐயப்பனை தரிசிக்க புக் செய்யும் பக்தர்கள் பயணத்திற்கு, தரிசனத்திற்கு, தங்கும்  அறைக்கு என தனித்தனியாக பதிவு செய்ய வேண்டாம் என்றும், ஒரே தடவை புக் செய்தாலே இவை மூன்றுமே பதிவாகும் விதத்தில் மாற்றம் கொண்டு வர  இருப்பதாகவும் தெரிவித்தார். 

sabarimalai

மேலும் இதற்க்கு முன்பு, சபரிமலைக்கு வரும் பக்தர்கள்,  தங்களது வாகனங்களை கூட்ட நெரிசல் காரணமாக நிலகல்லில் விட்டு விட்டு, அங்கிருந்து அரசு பேருந்தில் பம்பைக்கு சென்று சுவாமியை தரிசித்து, மீண்டும் அரசு பேருந்தில் நிலக்கல் வரையில் திரும்பி வரும் வழக்கம் இருந்து வந்தது. தற்போது அந்த முறையிலும் தேவசம் போர்டு மாற்றம் கொண்டு வந்துள்ளது. பக்தர்கள் இனி தங்களது வாகனங்களை பம்பை வரையில் கொண்டு செல்லலாம் என அறிவித்துள்ளது.