சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழ் வந்தது – இந்தியாவில் கொரோனா

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழ் வந்தது – இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் இந்தியாவே முதல் இடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இருந்து வருகிறது.

இன்று, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 95 லட்சத்து 87 ஆயிரத்து 475 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 09 ஆயிரத்து 135 பேர்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழ் வந்தது – இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனாவுக்காகச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழே வந்துள்ளது. ஒன்றரை மாதத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றமாகும். தற்போது இந்தியாவின் ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 7,95,087 பேர்.

இந்தியாவில் இதுவரை 65,24,595 பேர் கொரோனாவிலிருந்து குணம
டைந்து விட்டனர். இது 87.78 சதவிகிதமாகும். இறப்பு விகிதம் 152 (1,12,998 பேர்).

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழ் வந்தது – இந்தியாவில் கொரோனா

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் கர்நாடகா மற்றும் கேரளா 2, 3 -ம் இடங்களில் உள்ளன. நான்காம் இடத்தில் தமிழ்நாடும், ஐந்தாம் இடத்தில் ஆந்திராவும் உள்ளன.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழ் வந்தது – இந்தியாவில் கொரோனா

அதிகளவில் கொரோனா இறப்பு நடக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் 2 மற்றும் 3 -ம் இடங்களில் கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களும் உள்ளன. தமிழ்நாடு நான்காம் இடத்திலும் உத்திரபிரதேசம் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.