சந்திரயான் 2 லேண்டருடன் தொடர்பு கொள்ள இன்னும் 14 நாட்கள் முயற்சி செய்வோம்…. நம்பிக்கை இழக்காத இஸ்ரோ

 

சந்திரயான் 2 லேண்டருடன் தொடர்பு கொள்ள இன்னும் 14 நாட்கள் முயற்சி செய்வோம்…. நம்பிக்கை இழக்காத இஸ்ரோ

சந்திரயான் 2 லேண்டருடன் தொடர்பு கொள்ள இன்னும் 14 நாட்கள் முயற்சி செய்வோம் என இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்தார்.

இதுவரை எந்தவொரு உலக நாடுகளும் மேற்கொள்ள தயங்கிய நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ சந்திரயான் 2 திட்டத்தை செயல்படுத்தியது. விஞ்ஞானிகளின் பல ஆண்டு கடின உழைப்பால் சந்திரயான் 2 உருவானது. கடந்த ஜூலை மாதம் சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் திட்டமிட்டப்படி தனது பயணத்தை தொடர்ந்தது.

சந்திரயான் 2 மேக்கிங்

நேற்று அதிகாலை நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கி.மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகத்தில் மூழ்கினர். சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தாலும் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. ஏனென்றால் சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. அது திட்டமிட்டப்படி சரியாக செயல்பட்டு வருகிறது.

விக்ரம் லேண்டர்

சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்த பிறகு முதல் முறையாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று தூர்தர்ஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான நம்பிக்கையை விஞ்ஞானிகள் இன்னும் கைவிடவில்லை. அடுத்த 14 நாட்கள் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். ஆக, சந்திரயான் 2 மிஷன் பின்னடைவு என்று இப்போது யாரும் கூற முடியாது. அடுத்த 14 நாட்களில் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடிந்தால் சந்திரயான் 2 மிஷன் வெற்றிதான்.