கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ‘ஆட்சேபகரமான’ நோட்டிஸ்கள்!

 

கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ‘ஆட்சேபகரமான’ நோட்டிஸ்கள்!

சோதனை முடிவில் லேப்டாப் ஒன்று, 5 செல்போன்கள், 4 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு, 8 சி.டி.க்கள் மற்றும் டி.வி.டி.க்கள், ஆட்சேபகரமான நோட்டீசுகளையும் கைப்பற்றினார்கள். பின்னர், 5 பேரையும் கோவை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.

இலங்கை ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதியுடன் கோவையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு இருப்பதை  அறிந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி கோவையில் 6 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர், முகமது அசாருதீன் மற்றும் ஷேக் இதயத்துல்லா ஆகியோரை ‘உபா’ சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

NIA officers

இதற்கிடையில், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த உமர் பாரூக்(வயது 32), கோவை வின்சென்ட் சாலை வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த சனாபர் அலி(24), அதே சாலையை சேர்ந்தச் சமேசா முபின்(27), உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த முகமது யாசின்(26), கோவை பள்ளி வீதியைச் சேர்ந்த சதாம் உசேன்(27) ஆகிய 5 பேர் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். சோதனை முடிவில் லேப்டாப் ஒன்று, 5 செல்போன்கள், 4 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு, 8 சி.டி.க்கள் மற்றும் டி.வி.டி.க்கள், ஆட்சேபகரமான நோட்டீசுகளையும் கைப்பற்றினார்கள். பின்னர், 5 பேரையும் கோவை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வு முடிவுகள் அடிப்படையில் கைது நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.