கொல்கத்தாவில் திடீர் பணமழை: சாலைகளில் விழுந்த பணத்தை ஆர்வமாக சேகரித்த மக்கள்!

 

கொல்கத்தாவில் திடீர் பணமழை:  சாலைகளில்  விழுந்த பணத்தை ஆர்வமாக சேகரித்த மக்கள்!

கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்குமாம்..ஆனால்  கொல்கத்தாவிலோ ஜன்னலை பிச்சுக்கிட்டு கொடுத்துள்ளது

கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்குமாம்..ஆனால்  கொல்கத்தாவிலோ ஜன்னலை பிச்சுக்கிட்டு கொடுத்துள்ளது. ஆம் வணிக நிறுவனத்தின் ஜன்னல் வழியாக தான் பணமழை பெய்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

money

கொல்கத்தாவில் உள்ள ஹோக் என்ற வணிக நிறுவனத்தில் நேற்று வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனை  நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கு பயந்து நிறுவன ஊழியர்கள்  அலுவலக கட்டடத்தின் பல்வேறு தளங்களிலிருந்து  கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசினர். வீசிய வேகத்தில் 100, 500, 2000 ரூபாய் கட்டுகள்  பிரிந்து காற்றில் பணமழையாக சாலைகளில் செல்வோரின் மீது விழுந்தது.  அதை கண்ட மக்கள், அதை அவரச அவசரமாக எடுத்து கொண்டு அங்கிருந்து  ஓட்டமும்  நடையுமாக ஓடினார்கள். 

money

இந்நிலையில் கொல்கத்தாவில் திடீர் பணமழை என்று சிலர் இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அப்போது ஊழியர்கள்  பணத்தை வீசுவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.