கொரோனா வைரஸ் எதிரொலி….. முதல்வர், எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் கை வைத்த அருணாசல பிரதேச அரசு….

 

கொரோனா வைரஸ்  எதிரொலி….. முதல்வர், எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் கை வைத்த அருணாசல பிரதேச அரசு….

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தை திரட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முதல்வர், துணை முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 30 சதவீதத்தை குறைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறத. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் மாநில அரசுகளின் வருவாய் நிலவரம் மோசமாக உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்ட மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

சம்பளம் குறைப்பு

இந்நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பீமா காண்டு தலைமையில் அம்மாநில அமைச்சரவையின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், முதல்வர், எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை குறைக்க அமைச்சரவை முடிவு எடுத்தது. மேலும் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள தயார் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பீமா காண்டு ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ்

அருணாசல பிரசேத முதல்வர் பீமா காண்டு இது குறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மாநில முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் குறைக்க அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது என தெரிவித்தார். தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகளும் முதல்வர் முதல் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை குறைத்தன. மத்திய அரசும், பிரதமர், குடியரசு தலைவர், எம்.பி.க்கள் ஆகியோரின் சம்பளத்தை குறைத்தது குறிப்பிடத்தக்கது