கொத்து கொத்தாய் வேலையிழக்கும் ஜொமோட்டோ ஊழியர்கள்! | 540 ஊழியர்கள் துரத்தியடிப்பு!

 

கொத்து கொத்தாய் வேலையிழக்கும் ஜொமோட்டோ ஊழியர்கள்! | 540 ஊழியர்கள் துரத்தியடிப்பு!

உணவு டெலிவரி, வாடிக்கையாளர் சேவை, பிற சேவைகள் என ஜொமோட்டோ நிறுவனத்தில் மட்டும் பல லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.  குறுகிய காலத்தில், இந்நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. நாடு முழுவதும் இந்நிறுவனத்திற்கான கிளைகள் உள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில், இந்நிறுவனத்தில்  வேலை செய்து வந்த சுமார் 540 பணியாளர்களை திடீரென வேலையில் நீக்கியுள்ளது ஜொமோட்டோ நிறுவனம். 

zomato

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குருக்ராமில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றிய 540 பேர் அதாவது 10% ஊழியர்களை நாங்கள் பணியிலிருந்து நீக்குகிறோம். அவர்களுக்கு அடுத்த 2 அல்லது 4 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படும். ஜொமோட்டோ நிறுவனம் சமீப காலமாக தொழில்நுட்பம் சார்ந்த சில மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது. வணிகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதைக் கொண்டு வாடிக்கையாளர் சேவை தீர்மானத்தின் வேகத்தை நாங்கள் வியக்கத்தக்க முறையில் மேம்படுத்தியுள்ளோம்.

zomato

இதனால் தற்போது 7.5% ஆர்டர்களுக்கு மட்டுமே சேவை தேவைப்படுகிறது. இது கடந்த மார்ச் மாதத்தில்15% ஆக இருந்தது. இதன் விளைவாகவே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த மாதமும் இதேபோல் ஜொமோட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றிய 60 ஊழியர்கள் நீக்கப்பட்டார்கள்.