குஜராத்தில் விநாயகர் சிலை முன்பு பீர் உடன் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்- வைரலாகும் வீடியோ
மது தடை செய்யப்பட்ட குஜராத் மாநிலம் சூரத்தில் “KingFisher-Beer” பொங்க விநாயகர் சதுர்த்து கொண்டாடப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 2ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குஜராத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, மது போதையில் நடனமாடிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மது தடை செய்யப்பட்ட குஜராத் மாநிலம் சூரத்தில் “KingFisher-Beer” பொங்க #GaneshChaturthi கொண்டாடும் பக்த ஜனங்கள்?
எலேய்…
கடவுல் இல்லைன்னு சொன்னவன் கூட, கடவுளை இவ்வளவு அசிங்க படுத்தியதா வரலாறு இல்லடா ?
நன்றி:- @timesofindia@pkcomrade @rajakumaari @anbeSelva @May17Movement pic.twitter.com/eXi1Ean3UK
— M.Gokul AMMK (@Gokul_Ammk) September 4, 2019
இதைதொடர்ந்து மகிதர்புரா போலீசார், சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டனர். மது அருந்தி ரகளையில் ஈடுபட்டதாக 8 பேரைக் கைது செய்துள்ளனர்.