கிளைகளில் ரொக்கமாக பணம் எடுத்தால் ரூ.125 வரை கட்டணம் – வாடிக்கையாளர்களை அதிர வைத்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

 

கிளைகளில் ரொக்கமாக பணம் எடுத்தால் ரூ.125 வரை கட்டணம் – வாடிக்கையாளர்களை அதிர வைத்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

அக்டோபர் 16ம் தேதி முதல் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வாடிக்கையாளர்களிடம் வங்கி கிளைகளில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.100 முதல் ரூ.125 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடந்த சில தினங்களுக்கு முன் தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அக்டோபர் 16ம் தேதி முதல், ஜீரோ பேலன்ஸ் கணக்கு வாடிக்கையாளர்கள்  வங்கி கிளைகளில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.100 முதல் ரூ.125 வரை கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் கிளையில் பணத்தை டெபாசிட் செய்யும் போதும் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஐ.சி.ஐ.சி.ஐ. மொபைல் பேங்கிங்

எங்களது வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை டிஜிட்டல் வழிமுறையில் மேற்கொள்வதை ஊக்குவிக்கவும், டிஜிட்டல் இந்தியா நடவடிக்கைகளில் பங்களிப்பை அளிக்கும் நோக்கிலும், மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தி என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். வாயிலாக மேற்கொள்ளும் பணப்பரிமாற்றம் மற்றும் யூ.பி.ஐ. பரிவரித்தனைகளுக்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளைகளில், ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான என்.இ.எப்.டி. பரிவர்த்தனைகளுக்கு ரூ.2.25 முதல் ரூ.24.75 வரை கட்டணம் (ஜி.எஸ்.டி.) வசூலிக்கப்படுகிறது. ரூ.2 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 முதல் ரூ.45 வரை கட்டணம் (ஜி.எஸ்.டி.) வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி