களை கட்டுகிறது ஜம்மு-காஷ்மீர்! வாரச்சந்தையில் அலைமோதிய கூட்டம்!

களை கட்டுகிறது ஜம்மு-காஷ்மீர்! வாரச்சந்தையில் அலைமோதிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அசம்பாவிதங்களை தடுக்கும் முயற்சியாக அங்கு 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. கடைகள், வா்த்தக வளாகங்கள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பரவலாக மூடப்பட்டிருந்ததுடன், பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. பின்னா், தடையுத்தரவுகள் படிப்படியாக தளா்த்தப்பட்டதுடன், கடைகள் திறக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்தும் படிப்படியாக தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

jammu and kashmir

இந்நிலையில், அனைவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமையாதலால் வார சந்தையை பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கடந்த 4 நாட்களுக்கு முன்பாகவே, காஷ்மீா் முழுவதும் முழு அடைப்பை கடைப்பிடிக்க வேண்டும் என்று சமூக விரோத சக்திகள் சிலர் சுவரொட்டிகள் மூலமாக மக்களுக்கும், வா்த்தகா்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். இது தொடா்பாக காவல்துறையினா் சிலரை கைதும் செய்திருந்தனா். இந்நிலையில், நேற்றைய ஸ்ரீநகர் வார சந்தையில் வழக்கத்தை விட அதிகமான அளவில் கூட்டம் கூடியது. மக்கள் ஆர்வமுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். நீண்ட காலத்திற்கு பிறகு பொதுமக்களின் நடமாட்டம் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ஏற்படத் துவங்கியுள்ளது. எனினும், சில பகுதிகளில் வர்த்தக வளாகங்கள் அச்சுறுத்தல்களுக்கு பயந்து மூடியே கிடந்தன.