கடுமையான நடவடிக்கைகளுக்கு பின்பும்……500ஐ நெருங்கியது கொரோனா வைரஸ் பாதிப்பு…. உயிர்பலி 9ஆக உயர்வு…..

 

கடுமையான நடவடிக்கைகளுக்கு பின்பும்……500ஐ நெருங்கியது கொரோனா வைரஸ் பாதிப்பு…. உயிர்பலி 9ஆக உயர்வு…..

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு, முடக்கம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த பிறகும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்கி விட்டது. மேலும உயிர் பலி எண்ணிக்கையும் 9ஆக உயர்ந்துள்ளது.

தினந்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் உயிர் இழப்பு அதிகரித்து வருவது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு மற்றும் மாவட்டங்கள் முடக்கம், மாநில எல்லைகள் மூடல் போன்ற நடவடிக்கைகளை தீவிரவமாக எடுத்து வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.

மருத்துவர்கள் சிகிச்சை

நேற்று மட்டும் நாடு முழுவதுமாக புதிதாக 99 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்த அளவுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுதான் அதிகரித்துள்ளது. மேலும் 2 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இதனையடுத்து நேற்றை நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498ஆக உயர்ந்துள்ளது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவ பணியாளர்கள் ஆலோசனை

ஆனால் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி மொத்தம் 478 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40 பேர் வெளிநாட்டவர்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இதுவரை  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளில் 35 பேர் தீவிர சிகிச்சை பலனாக அதிலிருந்து மீண்டு நலமாகி உள்ளனர் என்ற நல்ல செய்தியும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.