ஒருவழியாக முடிவுக்கு வந்தது மகாராஷ்டிரா தேர்தல் களம்! அங்கேயும் சாதித்த பாஜக!! 

 

ஒருவழியாக முடிவுக்கு வந்தது மகாராஷ்டிரா தேர்தல் களம்! அங்கேயும் சாதித்த பாஜக!! 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

சட்டப்பேரவையில் மொத்தம் 288 இடங்களை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு 145 இடங்கள் தேவை. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களை மட்டுமே கைப்பற்றியது சிவசேனா 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றிபெற்றன.

Devendra Fadnavis

இந்நிலையில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு சிவசேனா- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுப்பறி நீடித்துவந்தது. மகாராஷ்டிரா முதமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநரை சந்தித்து பேசினார்.  இந்நிலையில் பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பாஜக என்பதால் ஆட்சியமைக்க பட்னாவிஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.