ஐயப்பனை தரிசிக்க ஹெலிகாப்டர் வசதி | சபரிமலையில் புதிய திட்டம்

 

ஐயப்பனை தரிசிக்க ஹெலிகாப்டர் வசதி | சபரிமலையில் புதிய திட்டம்

உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் சன்னிதியில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையின் போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கில் சபரிமலைக்கு வருவார்கள்.

உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் சன்னிதியில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையின் போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கில் சபரிமலைக்கு வருவார்கள். இந்தியா மட்டுமல்லாது, கோயில் நடை திறக்கும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் சபரிமலை சென்று சாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

sabarimalai temple

சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. சபரிமலையின் தேவசம் போர்ட் தற்போது ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக புதியதாக ஹெலிகாப்டர் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக நெடுவஞ்சேரி விமான நிலையத்தின் அருகே உள்ள காலடி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு உள்ளது.  காலடியில் இருந்து பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலமாக ஐயப்பனை தரிசிக்க நிலக்கல் வரையில் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது.

sabarimalai temple

இதுவரை சாலை வழி பயண பாதையாக இருந்த இந்த தூரத்தை 35 நிமிட நேரத்தில் ஹெலிகாப்டர் மூலமாக சென்றடையலாம்.  இதற்காக காலடியில் இருந்து நிலக்கல்லுக்கும், நிலக்கல்லில் இருந்து காலடிக்கும் தினமும் 6 முறை ஹெலிகாப்டர் சென்று வரும் வகையில் தேவசம்போர்டு ஏற்பாடு செய்து வருகிறது. காலை 7 மணிக்கு முதல் ஹெலிகாப்டர் பயணம் தொடங்கும் மாலை 4.15 மணியுடன் ஹெலிகாப்டர் சேவை நிறைவடையும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு  பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த காலத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் இருக்கும். அவர்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கும் விதத்தில் இந்த பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

helicopter

நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந்தேதி வரை ஹெலிகாப்டர் சேவை நடைபெறும் விதத்தில் திட்ட மிடப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்ய பக்தர்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்வது என்பது பற்றி தேவசம் போர்டு இன்னும் முடிவு செய்யவில்லை. விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் இதற்கான ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.