ஊரடங்கை கவனித்து வருகிறோம்… தாராளமாக கடன் கொடுக்க உத்தரவு! – எரிச்சலூட்டிய ரிசர்வ் வங்கி

ஊரடங்கை கவனித்து வருகிறோம்… தாராளமாக கடன் கொடுக்க உத்தரவு! – எரிச்சலூட்டிய ரிசர்வ் வங்கி

ஊரடங்கால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான எந்த ஒரு பொருளாதார உதவியையும் அறிவிக்காமல் வெறும் கண்காணித்து வருகிறோம் என்ற வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பேசியிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரிவர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பொருளாதார உதவிகள் ஏதும் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பேட்டி தொடங்கியதிலிருந்து ஊரடங்கை கவனித்து வருகிறோம், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு என்று அவர் பேசி வந்தார்.

sakthi-kantha-dass-67

பேட்டியின் முக்கிய விவரங்கள் வருமாறு:
“பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கொரோனாவிற்கு எதிராக போராடும் பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. 
ஊரடங்கு காரணமாக நாட்டின் நுகர்வு 20 முதல் 30 சதகிவிகிதம் குறைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவினால் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உலகமே பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இந்தியாவில் பொருளாதார சரிவை மீட்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் சிறிய ஏற்றம் தென்படுகிறது.

rbi-89.jpg

வங்கி சேவைகள் தேக்கம் இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் 91 சதவிகித ஏ.டி.எம்-கள் வழக்கம்போல செயல்படுகின்றன. ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பும் பணியை வங்கிகள் சிறப்பாக செய்து வருகின்றன. பங்கு சந்தை தடையின்றி செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பணப்புழக்கம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் தாராளமாக கடன் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. வங்கிகளில் போதுமான அளவு ரொக்கம் கையிருப்பு உள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதத்தில் இருந்து 3.75 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. கடன் கொடுப்பதற்காக நபார்டு, என்.எச்.பி போன்ற சிறப்பு நிறுவனங்களுக்கு  ரூ.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.