இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் கட்டாயம்: டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!

 

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட்  கட்டாயம்:  டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!

அனைத்து மாநில அரசுகளும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு  அறிவித்தது.

இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற விதி அமலுக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஆனாலும் சரிவர நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.  இதை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி  வருபவர்களுக்கு போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் வழக்கத்திற்கு  வந்துள்ளனர். அதேபோல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும்  அனைத்து மாநில அரசுகளும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு  அறிவித்தது.

bike

அதன்படி கேரளாவிலும் இரு  சக்கர வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து  இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற  உத்தரவுக்கு  விலக்கு  கேட்டு  உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.ஆனால் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனக்கூறி இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

kerala

இந்நிலையில் கேரளாவில் டிசம்பர் 1-ந்தேதி முதல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் அணியவேண்டும்  என்ற சட்டம் அமலுக்கு வருகிறது. இல்லையெனில் அபராதம்  விதிக்கப்படும் என்று கேரளஅரசு கூறியுள்ளது. இந்த உத்தரவு 4 வயதிற்கு மேற்பட்ட  அனைவருக்கும் பொருந்தும்.