இப்படியே போனா…. மே மத்திக்குள் 13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும்…. எச்சரிக்கும் ஆய்வறிக்கை

 

இப்படியே போனா…. மே மத்திக்குள் 13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும்…. எச்சரிக்கும் ஆய்வறிக்கை

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் தொடர்ந்து பரவினால், மே மாத மத்திக்குள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தொட்டு விடும் என ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கை செய்துள்ளது.

அமெரிக்க விஞ்ஞானிகள் அதிகம் கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்கள் கொண்ட குழு ஒன்று நம்நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர். அந்த அறிக்கையில், இந்தியாவில் தற்போதைய அளவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவினால் ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.30 லட்சம் வரை அதிகரிக்கும்.

மருத்துவ பரிசோதனை

மேலும் மே மாத மத்திக்குள் கொரோனாவால் 10 லட்சம் முதல் 13 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை செய்துள்ளது. இந்த மதிப்பீடுகள் நம் நாட்டில் உள்ள சில மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடையே கவலையை வலுப்படுத்துகின்றன. 130 கோடி மக்களுக்கு மேல் வாழும் இந்த நாட்டில் வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து, நாட்டின் சுகாதார முறையை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் உதவி குழு

அதேசமயம் நாடு மேலும் சோதனைகளை மேற்கொள்வதால் இந்த கணிப்புகள் (பாதிப்புகளின் எண்ணிக்கை) மாறக்கூடும் என விஞ்ஞானிகள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.