இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை….. 4 நாளில் ரூ.6 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….

 

இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை….. 4 நாளில் ரூ.6 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. சர்வதேச முதலீட்டாளர்கள் சேவை நிறுவனமான மூடிஸ், இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை குறைத்தது. சீனாவில் கொரோனாவைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. சில முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இல்லாதது  போன்ற காரணங்களால் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.49 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது, நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.6 ஆயிரம் கோடியை இழந்துள்ளனர்.

பங்கு வர்த்தகம்

கடந்த 4 வர்த்தக தினங்களின முடிவில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 87.62 புள்ளிகள் குறைந்து 41,170.12 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 32.60 புள்ளிகள் சரிந்து 12,080.85 புள்ளிகளில் நிலைகொண்டது.