இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை
Apr 11, 2020, 16:13 IST1586601812000
வீடியோ மூலம் 13 மாநில முதல்வர்களுடன் நான்கு மணி நேர சந்திப்பை பிரதமர் மோடி இன்று நடத்தினார். அதில் நாடு முழுக்க ஊரடங்கை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி சரியான முடிவை எடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.