இந்தியாவில் 7 லட்சம் கோடிகள் முதலீடு! களமிறங்கியது சவுதி அரேபியா! 

இந்தியாவில் 7 லட்சம் கோடிகள் முதலீடு! களமிறங்கியது சவுதி அரேபியா! 

எதிரிக்கு எதிரி நண்பன் என்று களமிறங்கி இருக்கிறது சவுதி அரேபியா. நம் நாட்டின் எரிபொருள் தேவைகளுக்காக, இதுநாள் வரையில் இந்தியா, தேவையான கச்சா எண்ணெய்களை ஈரான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது.  சமீபமாக இந்தியா, கச்சா எண்ணெய்களை ஈரான் நாட்டிலிருந்து இறங்குமதி செய்வதை தவிர்த்து வந்தது. தற்போது ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தி கொண்டது.  ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொண்டதால், தற்போது கச்சா எண்ணெய்காக முழுவதுமாக சவுதி அரேபியா நாட்டினையே  இந்தியா நம்பியுள்ளது. 

crude oil

ஏற்கெனவே சவுதி அரேபியா நாட்டிற்கும், ஈரான் நாட்டிற்கும் பிரச்சனைகள் இருந்து வருவதால், ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை கொள் முதல் செய்யாத இந்தியா மீது, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில், சவுதி அரேபிய மிகவும் நட்பு பாராட்டி வருகிறது. இந்த நட்பு, இந்தியாவில் சவுதி அரேபியா முதலீடு செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. தற்போது சவுதி அரேபியா, 100 பில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. சவுதி அரேபியா முதலீடு செய்யவிருக்கும் 100 பில்லியன் டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாயாகும். இந்த 7 லட்சம் கோடிகளையும் இந்தியாவில் தொழில் தொடங்க சவுதி அரேபிய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த 100 பில்லியன் டாலரை சவுதி அரேபியா, இந்தியாவில் எரிசக்தி துறை, ஆட்டோமொபைல், சுரங்கம், விவசாயம் என 40 துறைகளின் முதலீடு செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் இந்த பணத்தில் பெரும்பங்கு தென் இந்தியாவில் களமிறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக  தெரிகிறது.