இந்தியர்களை மீட்க சீனாவின் வுகான் நகருக்கு பறக்கும் பிரம்மாண்டமான ராணுவ விமானம்

 

இந்தியர்களை மீட்க சீனாவின் வுகான் நகருக்கு பறக்கும் பிரம்மாண்டமான ராணுவ விமானம்

சீனாவின் வுகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சி-17 குளோபல் மாஸ்டர் என்ற பிரம்மாண்டமான ராணுவ விமானத்தை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லி: சீனாவின் வுகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சி-17 குளோபல் மாஸ்டர் என்ற பிரம்மாண்டமான ராணுவ விமானத்தை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் சிறிதளவு குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. வுகான் நகரில் இந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர்.

ttn

முன்னதாக இந்தியாவில் இருந்து ஒரு ராணுவ விமானம் சீனாவுக்கு சென்று அங்கு இருந்த இந்தியர்களில் சிலரை டெல்லிக்கு மீட்டு அழைத்து வந்தது. அங்கு அவர்கள் சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தனர். இந்த நிலையில், சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க சி-17 குளோபல் மாஸ்டர் என்ற பிரம்மாண்ட ராணுவ விமானத்தை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டது.

ஆனால் இதற்கு சீன அரசு மறுப்பு தெரிவித்ததால், இந்தியர்களை மீட்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தியர்களை மீட்க சீன அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் நாளை வுகான் நகருக்கு செல்கிறது. இதையடுத்து இந்த விமானம் வுகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி இந்தியா திரும்பும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.