இதாண்டா போலீஸ் பவர்…தாவுடா செவல; மெட்ரோ நுழைவு கேட்டில் தவ்வி குதித்த போலீஸ் அதிகாரி!

 

இதாண்டா போலீஸ் பவர்…தாவுடா செவல; மெட்ரோ நுழைவு கேட்டில் தவ்வி குதித்த போலீஸ் அதிகாரி!

மெட்ரோவில் பயணிக்க டிக்கெட் எடுத்து உள்ளே சென்றவர்கள் அதனை உபயோக்கிககாமல் ஒரு மணி நேரம் கழித்து வெளியேறினால் அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கும் விதிமுறையை சுட்டிக் காட்டி அந்த பெண் காவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பெங்களூரு: மெட்ரோ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி, உள்ளே நுழையும் தானியங்கி கதவின் மேல் தவ்விக் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு மாநகர பேருந்தில் சீருடையின்றி பயணித்த பெண் போலீஸ் ஒருவரிடம் டிக்கெட் எடுக்குமாறு கூறிய நடத்துனருடன், அந்த பெண் காவல் அதிகாரி பிரச்னையில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தினால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்கு உள்ளாகவே, தனது போலீஸ் பலத்தை நிரூபிக்கும் பொருட்டு, மெட்ரோ நுழைவு கேட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் தவ்வி குதித்த சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

bmrcl

ராகுல்காந்தி வருகையையொட்டி, பெங்களூரு தசரஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய இரண்டு பெண் காவலர்கள் சென்றுள்ளனர். தங்களை இலவசமாக உள்ளே அனுமதிக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், டோக்கன் எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் கழித்து திரும்பியுள்ளனர்.

ஆனால், மெட்ரோவில் பயணிக்க டிக்கெட் எடுத்து உள்ளே சென்றவர்கள் அதனை உபயோக்கிககாமல் ஒரு மணி நேரம் கழித்து வெளியேறினால் அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கும் விதிமுறையை சுட்டிக் காட்டி அந்த பெண் காவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

bmrcl

இதையடுத்து, மறுநாள் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒருவருடன் மீண்டும் தசரஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அந்த பெண் காவலர்கள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தனது போலீஸ் அதிகார பலத்தை காட்டும் பொருட்டு, அந்த துணை கண்காணிப்பாளர் கண்மூடித்தனமாக கத்தியுள்ளார். தொடர்ந்து, மெட்ரோ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், அவர்கள் கூறிய விதிமுறைகள் குறித்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல், தன்னால் எப்போது வேண்டுமானாலும், உள்ளே நுழைய முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும், பயணிகள் டிக்கெட் எடுத்து உள்ளே நுழையும் தானியங்கி கதவு மீது ஏறி தவ்வி குதித்ததுடன், முடிந்தால் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சவால் விட்டுள்ளார். காவல்துறை அதிகாரியின் இந்த செயலை கண்ட அங்கிருந்த பயணிகள் மற்றும் மெட்ரோ அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

bmrcl

இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், போலீஸ் அதிகாரிகள் மெட்ரோ நிலையத்தில் இலவசமாக நுழையவோ, பயனிக்கவோ முடியாது. ஒருவேளை இலவசமாக செல்ல வேண்டுமானால், பயப்பன்ஹள்ளியில் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்தில் அனுமதி பெற வேண்டும். குற்றவாளிகளை துரத்தும் போது, போலீஸ் அதிகாரிகள் இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டால் யாரும் கேட்கபோவதில்லை. ஆனால், தன்னுடைய அதிகார பலத்தை காட்டும் பொருட்டு அவர் இதுபோன்று செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு வடக்கு காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க

கணவனுக்கு பயந்து டெல்லியைத் தேர்வு செய்த பிக் பாஸ் நித்யா! எதுக்குனு தெரியுமா?