ஆசிரமத்திற்குச் சென்ற பிராணாசாமி எங்கே?.. பதிலளிக்க நித்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

 

ஆசிரமத்திற்குச் சென்ற  பிராணாசாமி எங்கே?.. பதிலளிக்க நித்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கர்நாடகாவில் உள்ள பிடதி ஆசிரமத்திற்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் சென்றுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு அங்குச் சென்ற  முருகானந்ததிற்கு ‘பிராணாசாமி’ என்னும் பெயர் சூட்டப்பட்டது.

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், குஜராத்தில் நித்தியானந்தா நடத்தி வந்த ஆசிரமம் மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதுமட்டுமில்லாமல்,ஆசிரம நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.காவல்துறைக்கு தண்ணி காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார்.

ttnn

அவரை 18 ஆம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என்று கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பல சட்டச் சிக்கல்களின் காரணமாக அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. 

 





ttn

இது ஒரு புறம் இருக்க, நித்தியானந்தா ஆசிரமத்திற்குச் சென்ற நபரை காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பிடதி ஆசிரமத்திற்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் சென்றுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு அங்குச் சென்ற  முருகானந்ததிற்கு ‘பிராணாசாமி’ என்னும் பெயர் சூட்டப்பட்டது.

ttn

சில நாட்களுக்கு முன்னர் பிடதியில் இருக்கும் சீடர்கள் தாக்கப்பட்டனர். அதனால், அதிர்ச்சி அடைந்த முருகானந்தம் தாயார் அங்கம்மாள் பிடதி ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். அங்கே அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ள என் மகனை மீட்டுத் தருமாறும் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். 

ttn

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், முருகானந்தம் தாயார் அங்கம்மாள் அளித்த மனுவிற்கு மாவட்ட காவல்துறையும் நித்தியானந்தாவும் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.