அயோத்தியைத் தொடர்ந்து நாளை வெளிவரவிருக்கும் அதிரடி தீர்ப்பு ! களை கட்டும் உச்சநீதிமன்றம்!

அயோத்தியைத் தொடர்ந்து நாளை வெளிவரவிருக்கும் அதிரடி தீர்ப்பு ! களை கட்டும் உச்சநீதிமன்றம்!

அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ள தடை எதுவும் இல்லை என்று அதிரடியாய் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இம்மாதம் 17ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். விடுமுறை தினங்களை கணக்கிட்டால், அவரது பணி காலம் இன்னும் இரு தினங்களே இருக்கின்ற நிலையில், நாளை மேலும் சில முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாக இருக்கின்றன.

rajan

14, 15ம் தேதிகள் மட்டுமே உச்சநீதிமன்ற வேலை நாட்கள். அதன் பின்னர் 16ம் தேதி (சனிக்கிழமை விடுமுறை), 17ம் தேதி (ஞாயிறு வழக்கமான விடுமுறை). இந்த நாளுடன் தலைமை நீதிபதி பணி ஓய்வு பெறுகிறார். அதன்பின், அடுத்த நாள் (நவ. 18) உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக 3 நாட்கள் மட்டுமே பணியாற்ற உள்ளார். அந்த நாட்களில் அவரது தலைமையிலான அமர்வு விசாரித்த சில முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளதால், நாடு முழுவதும் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

sabarimalai

இதில் முக்கியமான வழக்காக சபரிமலை சீராய்வு வழக்கு பார்க்கப்படுகிறது.   அனைத்து வயது பெண்களும் கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை கோகாய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு நாளை அளிக்க உள்ளது.
அதே போன்று, ரபேல் ஒப்பந்த சீராய்வு வழக்கிலும் நாளை தீர்ப்பு வெளியாக இருக்கிறது. பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உட்பட பலரும் குற்றம் சாட்டினர். இது குறித்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தீர்ப்பு அளித்து விட்டது. ஆனால், இதற்கிடையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சில ஆவணங்கள் ஊடகங்களில் வெளியானதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வெளியிட உள்ளது.