அயோத்தியில் இயல்புநிலை திரும்புகிறது!

அயோத்தியில் இயல்புநிலை திரும்புகிறது!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தடை உத்தரவு, மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தீர்ப்புக்குப் பிறகு நாடு முழுவதும் அமைதியான சூழ்நிலை நிலவவதைத் தொடர்ந்து அயோத்தியிலும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியுள்ளனர்.
அயோத்தி தொடர்பான தீர்ப்பு வெளியாக உள்ள சூழலில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தடை உத்தரவு, மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தீர்ப்புக்குப் பிறகு நாடு முழுவதும் அமைதியான சூழ்நிலை நிலவவதைத் தொடர்ந்து அயோத்தியிலும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியுள்ளனர்.
அயோத்தி தொடர்பான தீர்ப்பு வெளியாக உள்ள சூழலில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொது மக்களும் நடமாட்டமும் அதிக அளவில் இல்லாமல் இருந்தது.

ayodhya

ஆனால், திங்கட் கிழமை (நவம்பர் 11, 2019) அயோத்தியில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அயோத்தியின் முக்கிய பகுதிகளில் வாகனங்கள் இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அயோத்திக்குள் வெளி மாவட்டத்தை, மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நுழையாத வகையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கள் இன்னும் அப்படியே உள்ளது. நகரம் முழுக்க காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளி இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அயோத்திக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இன்று கார்த்திக் பூர்ணிமா என்ற விழா கொண்டாடப்படுவதால் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. பாதுகாப்புப் பணிகள் இன்னும் ஒரு சில வாரங்களுக்குத் தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.