அயோத்தி பிரச்னை முடிய வேண்டும் என விரும்பினோம்…. நடந்து விட்டது- ஆர்.எஸ்.எஸ்.

 

அயோத்தி பிரச்னை முடிய வேண்டும் என விரும்பினோம்…. நடந்து விட்டது- ஆர்.எஸ்.எஸ்.

அயோத்தி பிரச்னை முடிய வேண்டும் என நினைத்தோம் அது இப்போது நடந்து விட்டது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

70 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்த அயோத்தி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்ற தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி காலியான இடத்தில் கட்டப்படவில்லை. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என வருவாய் துறை பதிவேட்டில் உள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். மற்றும் எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும். இந்த பிரச்னை முடிய வேண்டும் என நாங்கள் விரும்பினோம், அது நடந்து விட்டது. வழக்கின் அனைத்து பகுதிகளிலும் மதிப்பீடு செய்யப்பட்டு உண்மை மற்றும் நீதி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

மதுரா

அந்த கூட்டத்தில், அயோத்தியை தொடர்ந்து மதுரா மற்றும் வாரணாசி வழக்குகளையும் ஆர்.எஸ்.எஸ். கையில் எடுக்குமா செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆர்.எஸ்.எஸ்.-ன் பணி போராட்டங்களை நடத்துவது அல்ல ஆனால் கட்டித்தின் தன்மையை வெளிக்கொணர்வது என தெரிவித்தார். மதுரா மற்றும் வாரணாசியில் கோயில்கள் மத்தியில் மசூதி இருப்பதை வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அயோத்தி போன்று அங்கும் கோயில்கள் இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாக வலது சாரிகள் கூறுகின்றனர்.