அமித்ஷா ஓரிரு நாளில் வீடு திரும்புவார்: பாஜக தகவல்

 

அமித்ஷா ஓரிரு நாளில் வீடு திரும்புவார்: பாஜக தகவல்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அணில் பாலுனி கூறியுள்ளார்.

டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அணில் பாலுனி கூறியுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு பன்றி காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதற்கான சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. கடவுள்  கருணையால், நான் விரைவில் குணமடைவேன் என கூறயிருந்தார்.அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், பாஜக செய்திப்பிரிவு தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அணில் பாலுனி இதுகுறித்து பேசுகையில், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நலமாக உள்ளார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். உடல்நலம் பெற வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்றார்.