அப்பா அப்துல்லா,அம்மா கதீஜா,ஆனால் மகள் திருமணம் பகவதி கோவிலில்..!

 

அப்பா அப்துல்லா,அம்மா கதீஜா,ஆனால் மகள் திருமணம் பகவதி கோவிலில்..!

அப்துல்லாவின் தோட்டத்திலும் வீட்டிலும் அவ்வப்போது வேலைக்கு வருபவர் சரவணன். பன்னிரண்டு வருடம் முன்பு சரவணன் இறந்த போது அவரது ஒரே மகளான ராஜேஸ்வரி அனாதை ஆகிப் போனாள். அப்துல்லா- கதீஜா தம்பதியருக்கு ஷமீம், நஜீம், செரீஃப் என்று மூன்றும் ஆண் மக்கள். மகளில்லாத குறையை போக்க ராஜேஸ்வரியை அப்துல்லா தம்பதியினர் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அவளை ராஜேஸ்வரியாகவே வளர்த்தார்கள்

இது ஒரு கேரளத்து மதம்தாண்டிய பாசத்தின் கதை.கேரள மாநிலம் காசர்கோடை அடுத்த மேலப்பரம்பில் நடந்த இந்தத் திருமணம்தான் இன்றை தினத்தில் கேரளத்தில் பேசு பொருளாக இருக்கிறது.

kerala-couple-wedding

அப்துல்லாவின் தோட்டத்திலும் வீட்டிலும் அவ்வப்போது வேலைக்கு வருபவர் சரவணன். பன்னிரண்டு வருடம் முன்பு சரவணன் இறந்த போது அவரது ஒரே மகளான ராஜேஸ்வரி அனாதை ஆகிப் போனாள். அப்துல்லா- கதீஜா தம்பதியருக்கு ஷமீம், நஜீம், செரீஃப் என்று மூன்றும் ஆண் மக்கள். மகளில்லாத குறையை போக்க ராஜேஸ்வரியை அப்துல்லா தம்பதியினர் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அவளை ராஜேஸ்வரியாகவே வளர்த்தார்கள்.அவளும் உம்மா,உப்பா என்றே அவர்களை அழைத்து குடும்பத்தில் ஒருத்தியாக வளர்ந்தாள். 

இப்போது ராஜேஸ்வரிக்கு 22 வயது ஆகிவிட்ட நிலையில் மகளுக்கு ஜாத பொருத்தம் எல்லாம் பார்த்து கன்ஹாட்டைச் சேர்ந்த விஷ்னு பிரசாத் என்கிற மணமகனைத் தேர்ந்தெடுத்தார்.ராஜேஸ்வரியின் திருமணம் இந்து முறைப்படிதான் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அப்துல்லா, கன்ஹாட்டில் உள்ள மன்புத் பகவதி கோவிலில் திருமணம் நடத்த முடிவு செய்தார். 

kerala-wedding

அதற்குக் காரணம் மன்புத் பகவதி கோவிலுக்குள் எல்லா மதத்தினரையும் அனுமதிப்பார்கள் என்பதுதான்.அதைத் தொடர்ந்து இந்துக்களும் இஸ்லாமியரும் ஒருங்கே கலந்து கொள்ள கடந்த ஞாயிறன்று பகவதி கோவிலில் அப்துல்லா, கதீஜா தம்பதியின் மகள் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.இதில் 84 வயதான அப்துல்லாவின் தாய் சபியும்மாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

இது பற்றி அப்துல்லா சொல்லும் போது எங்கள் மகள் திருமணம் ஆகி மாமியார் வீட்டுக்கு போய்விட்டதால் என் மனைவி கதீஜா சோகத்தில் இருக்கிறாள். வளைகுடாவில் வேலை பார்க்கும் ராஜேஸ்வரியின் அண்ணன்களுக்கு விடுமுறை கிடைக்காததால் அவர்களால் திருமணத்திற்கு வரமுடியவில்லை.ஆனால் விரைவில் ஷமீம்,நஜீப்,செரீஃப் மூவரும் தங்களது தங்கையைப் பார்க்க வருவார்கள். அப்போது எங்கள் மகள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள் என்கிறார்.இப்போது ஒட்டு மொத்த கேரளமும் இந்த செய்தியால் நெகிழ்ந்துபோய் இருக்கிறது.