"pure veg mode" திட்டத்தை கைவிட்டது ஜோமோட்டோ

 
tn

Zomato நிறுவனம் ப்யூர் வெஜ் மோடு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. 

tnt

பச்சை வண்ண டெலிவரி உடையுடன் zomato உணவை தயாரிக்கும் உணவகம் மட்டுமல்லாது அதனை டெலிவரி செய்யும் ஊழியர்களும் சைவ உணவை மட்டுமே வழங்கும் பியூர் வெஜ் மோடு திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.  சைவ உணவுகளை மட்டுமே விநியோகிக்கும் ஊழியர்கள்பச்சை நிறை டி ஷர்ட் மற்றும் பையை அந்நிறுவனம் வழங்கியது. இறைச்சி, மீன் ,முட்டை போன்ற அசைவை உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் இருந்து கூட சைவ உணவுகள் இதன் மூலம் வழங்கப்படாது . தூய சைவ உணவுகளை விரும்புவோருக்காக அதி சுத்தமான முறையில் டெலிவரி இருக்கும் என்றும் கூறப்பட்டது.  இதற்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும் மறுபுறம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அசைவ உணவு என்பது உணவை அசுத்தப்படுத்தும் என்ற எண்ணம் ஜாதி வெறியின் அடிப்படை என்றும் , சுத்தமான வெஜிடேரியன் என்றால் அசைவம் என்பது அசுத்தமான தீண்டதகாததா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இந்நிலையில் டொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் , ப்யூர் வெஜ் மோடு நடைமுறைக்கு மத அரசியல் ரீதியிலான காரணங்கள் எதுவும் இல்லை.  சைவ உணவுகளை வழங்குவதால் பியூர் வெஜ் மோடின் படி பச்சை நிறங்களில் அதனை டெலிவரி செய்யும் நடைமுறையை கொண்டுவந்தோம். இருப்பினும் தற்போது இம்முறையை  கைவிடுவதாகவும் , இனி தங்களது ஊழியர்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் சிவப்பு நிற உடையை அணிவார்கள்  என்றும் குறிப்பிட்டுள்ளார்.