வாக்காளர்களிடம் பணம் கொடுத்துவிட்டு சத்தியம் வாங்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

 
சத்தியம்

ஆந்திரப் பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களிடம் பணம் கொடுத்துவிட்டு சத்தியம் வாங்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பரப்புரை  நேற்று மாலை ஆறு மணியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக அந்தந்த கட்சியினர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர  முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


திருப்பதி அருகே கொரலகுண்டாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டு ஆஞ்சநேயர் கோயிலில் கற்பூரம் ஏற்றி சத்தியம் வாங்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.  கட்சியைச் சேர்ந்த நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயச்சந்திரா ரெட்டி முன்னிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது